vallme2003
    Find out what I'm doing, Follow Me :)
Showing posts with label airtel cheat. Show all posts
Showing posts with label airtel cheat. Show all posts

Saturday, February 13, 2010

Airtel cheating??? Save India From Airtel

I saw this is in a famous site and would like to share with you guys...

(DISCLAIMER : These comments were not made by me)

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நூதன முறையில் ஏமாற்றபடுகிறார்கள், அவர்கள் விழிப்புணர்வாக மட்டுமே இங்கு பதிவு செய்கிறோம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து புகார்கலும் ஏர்டெல்-ல் பதிவு செய்யப்பட்ட புகார்களே…!


ஏர்டெல் பூஸ்டர் பேக் கொள்ளை:
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மாதம் தோரும் 125 ரூபாய் பூஸ்டர் பேக் போட்டால்.. ஒரு நிமிடத்திற்கு ஏர்டெல் TO ஏர்டெல் 10 பைசா, மற்ற மொபைலுக்கு 50 பைசா, லேன்டு லைனுக்கு 1 ரூபாய், குறுஞ் செய்திக்கு 5 பைசா அல்லது அவர் பிளான் படி இருக்கும். இது 30 நாட்கள் வேலிடிட்டி. 245 ரூபாய் பூஸ்டர் பேக்கிலும் இதே கால் கட்டணம்தான் ஆனால் 90 நாட்கள் வேலிடிட்டி என்பது ஏர்டெல் நிறுவனத்தின் அறிவிப்பு.
125 ரூபாய் அல்லது 245 ரூபாய் செலுத்தி பூஸ்டர் பேக்கிலுள்ள வாடிக்கையாலர்கள் பணத்தை திருட ஏர்டெல் பின்பற்றும் நூதன களவு முறைகள்.. (ஏர்டெல், வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவது சில நேரங்களில் வாடிக்கையார்க்கே தெரிவதில்லை என்பது கூடுதல் தகவல்)

(1). நூதன் திருட்டு :

வாடிக்கையாளர்கள் பூஸ்டர் பேக்கில் இருக்கும்போதே, ஏதாவது பண்டிகை….. புதுவருடம், பொங்கள், தீபாவளி, அம்மாவாசை, பொளர்னமி, அஷ்டமி, நவமி, பிறந்தநாள், இறந்தநாள் என்று ஏதாவது வருகிறது என்றால் அதற்கு முன்னறே ஒரு குறுஞ்செய்தி வாடிக்கையாளர் மொபைலுக்கு வரும். எடுத்துக்காட்டாக “ புது வருடத்தை முன்னிட்டு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாலும் குறுஞ்செய்தி ஒன்றிற்கு 50 பைசா வசூலிக்கப்படும் ” என்ற செய்தி.
நாடு முழுவதும் ஏர்டெல் ரீடெய்லர்கள் உள்ளனர். எந்த கடையிலாவது போய் இன்று ஏர்டெல் ஆபர் என்ன உள்ளது என கேட்டுப்பாருங்கள்….. ஒரு தெளிவான பதிலே கிடைக்காது.

(2). கால் போகும் ஆனால் போகாது:
வாடிக்கையாளர்களை கொள்ளையடிக்க ரூம் போட்டு யோசிக்கும் ஏர்டெல்…..
ஏர்டெல் பொபைலில் இருந்து மற்றொருவரை தொடர்புகொள்ளும்போது…. ரிங் போகும், கால் அட்டன் பன்னுவார்கள்… ஆனால் ஒருவருக்கொருவர் பேசுவது கேக்காது. உடனே அழைப்பு கட்டணத்தை எடுத்துவிடுவார்கள். சில வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சனைக்கு போன் பிராபலம் அல்லது டவர் பிராபலம் என்று என்னிகொண்டு அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இதை ஒரு பொழப்பாகவே நடத்திவருகிறது நூதன கொள்ளையில் ஈடுபட்டு வரும் பிரபல ஏர்டெல் நிறுவனம்.

(3). 40 வினாடி = ஒரு நிமிடம் - ஏர்டெல் சட்டம்:
125 அல்லது 245 பூஸ்ட்டர் பேக்கில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் மொபைல் பேலன்ஸ் 20 பைசாவிற்கு குறைவாக இருக்கும் போது, அதாவது ஒரு கால் பேசும் அலவிற்கு பேலன்ஸ் இருக்கும்போது அந்த கடைசி கால் 40 வினாடிகளில் ஏர்டெல் நெட்வொர்க்கால் துண்டிக்கப்படுகிறது.

(4). ஏர்டெல் – காலர் டியூன் மோசடி:
எனது கிராமத்து பாட்டியை ஏமாற்றிய ஏர்டெல்……….
2 மாதங்களுக்கு முன், கிராமத்தில் இருக்கும் எனது பாட்டிக்கு ஒரு ஏர்டெல் சிம் போட்டு ஒரு போன் வாங்கி கொடுத்து, அவசரத்திற்கு பயன்படுத்த 100 ரூபாய் டாப் அப் செய்து கொடுத்து விட்டு பணி ரீதியாக வெளியூர் சென்று விட்டேன். சென்ற மாதம் பாட்டியை பார்க்க கிராமத்திற்கு சென்றிருக்கையில் பாட்டியின் போன் பேலன்ஸில் 30 ரூபாய் அப்பட்டமாக குறைந்திருந்தது. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கையில் அவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு ” ஏர்டெல் உங்களுக்கு 1 மாத காலர் டியூன் இலவசமாக பயன்படுத்த தானாகவே ஆக்டிவேட் செய்தது. ஒரு மாதம் முடிந்த உடன் நாங்கள் 30 ரூபாய் அடுத்த மாதத்ற்காக எடுத்து கொண்டோம் ” இந்த பதிலை கேட்ட உடன் நீங்களே புரிந்துகொள்ளுங்கள் ஏர்டெல் எனது பாட்டியை ஏமாற்றிய விதத்தை.

(5). காலர் டியூனாக ஒலிப்பது பாடலா…? ஏர்டெல் விளம்பரமா…?
ஒருவர் காலர் டியூன் ஆக்டிவேட் செய்திருந்தால், அவரை தொடர்புகொள்பவருக்கு …டிரிங்….டிரிங் என்ற ஒலிக்கு பதிலாக அவர் ஆக்டிவேட் செய்துள்ள பாடல் கேட்கும். இங்கும் ஏமாற்று வேலையை துவங்கிவிட்டது ஏர்டெல்.
ஏர்டெல் காலர் டியூன் ஆக்டிவேட் செய்துள்ள ஒருவரை நீங்கள் தொடர்பு கொண்டால் அவரின் காலர் டியூன் ஒலி கேட்பதில்லை. மாறாக, “ இந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த எண்ணை அழுத்துங்கள். டவுன்லோடு சார்ஜ் ரூபாய்.15 மட்டும்தான், மாதவாடகை ரூபாய்.30 மட்டும் தான் “ என்ற விளம்பரம் தான் ஒலிக்கும். இந்த விளம்பரம் முடிவதற்குள் நீங்கள் தொடர்பு கொண்டவர் உங்கள் காலை அட்டன் செய்து விடுவார். அவர் என்ன பாடல் காலர் டியூனாக வைத்துள்ளார் என்பது கூட உங்களுக்கு தெரியாது. பின் எதற்கு அவர் மாதம் மாதம் ரூபாய்.30 ஏர்டெலிற்கு மொய் எழுத வேண்டும்………?
(மிஸ்டு கால் கொடுத்து பேசும் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பரத்தால் தன்னிடம் உள்ள குறைந்தபட்ச பேலன்சையும் இழக்க நேரிடும். காரணம், தொடர்பு கொள்பவருக்கு ரிங் சத்தமோ, காலர் டியூனோ ஒலிக்காது. மாறாக ஏர்டெல் காலர் டியூன் விளம்பரம் மட்டுமே கேட்க்கும். இவர்கள் காலர் டியூன் அல்லது ரிங் ஒலி கேட்ட பிறகு கட் செய்யலாம் என நினைப்பது பலிக்காது! )

(6). குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடு்ம் ஏர்டெல்:

சற்று அதிகமாக மொபைல் பேலன்ஸை வைத்திருப்பவர்கள் பணம், ஏர்டெல்-லால் திருடப்படும் வழிமுறை:

புஷ் மெசேஜ்(push sms) என்ற பெயரில் கன்ட கன்ட (SMS) குறுஞ்செய்திகளை வாடிக்கையாளர்கல் மொபைல் போனுக்கு ஏர்டெல்-லிருந்து வரும். அதை ஓப்பன் செய்தாலே போதும் 99 ரூபாய் வாடிக்கையாளர் பேலன்ஸில் இருந்து எடுக்கப்படும். இந்த பிரச்சனையில் சிக்கிய நாங்கள், இது தொடர்பாக ஏர்டெல் வாடிக்கையார் சேவை மையத்தை தொடர்புகொண்டு கேட்டதற்கு அவர்கள் அளித்த விளக்கம் “ நாங்கள் அனுப்பிய SMS-ஐ ஓப்பன் செய்ததன் மூலம் ஜாவா கேம் என்ற விளையாட்டை டவுன்லோடு செய்துளீர்கள். அதற்காக 99 ரூபாய் எடுத்துள்ளோம் என்றார்கள் “ என்றார்கள். ஏர்டெல் கூறிய பதில் ஏற்கப்படும் விதத்தி்ல் இல்லை. எனவே மீண்டும மீண்டும கடும் வாக்கு வாதத்திற்கு பிறகு பல முறை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு மீண்டும் அந்த 99 ரூபாயை திரும்ப பெற்றோம்.

தோழர்களே சற்று சிந்தித்து பாருங்கள்.. இவர்களை(ஏர்டெல்) யார் புஷ் (SMS) குறுஞ்செய்தி அனுப்ப சொன்னது, அதை ஓப்பன் செய்த உடனே 99 ரூபாயை எடுத்துகொள்கிறார்களே… அந்த ஜாவா கேம் முழுவதும் டவுன்லோடு ஆனதா…? ஆகவில்லையா….? என்று ஏர்டெல்-லிற்கு தேரியுமா…?, பணத்தை திருடுவதிலே தமது நோக்கத்தை செலுத்தும் ஏர்டெல் தாம் எடுத்த பணத்திற்காக பயன் வாடிக்கையாளரை சென்றதா என இவர்கள் ஏன் யோசிப்பதில்லை..?

(7). ஏர்டெல் – தாய் வீட்டு சீதனம்…?
புதிதாக வாங்கும் எந்த ஒரு பிரிபெய்டு ஏர்டெல் சிம் கார்டுகலிலும் சில எண்கள் அதிலே பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த எண்ணை தெரிந்தோ….. தெரியாமலோ கால் செய்து ஒரு வினாடியில் கட் செய்து விட்டால் கூட உடனே ஏர்டெல் பணம் பறிக்கும் சேவைகள் ஆக்டிவேட் செய்துவிடுகிறது. இதற்கு ஏர்டெல் கூறும் காரணம்.., “ நீங்கள் இந்த எண்ணை கால் செய்ததன் மூலம் ரேடியோ சர்வீஸை ஆக்டிவேட் செய்துள்ளீர்கள். இதற்க்காக நாங்கள் 10 வினாடிக்கு ரூபாய்.10 எடுத்துக் கொண்டோம். “ என்கிறார்கள்.

(8). முடிவுரை:
மேலே பதிவு செய்யப்பட்டுள இது போன்ற நூதன திருட்டிலிருந்து நமது நாட்டு மக்களை விடுவிக்க ஒரே வழி, அனைவருக்கும் கல்வி மட்டுமே..!!!!! இந்தியாவில் எழுத்தரிவு 100 % எட்டும் வரை நம் நாட்டு மக்கள் பணம் திருடப்பட்டுக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை